புதுச்சேரி

புதுச்சேரியில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: சட்டப்பேரவையில் தவெக எம்எல்ஏ சாய் சரவணன் வலியுறுத்தல்!

புதுச்சேரி: சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியான புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மதுபானக் கூடங்களைக் கட்டுப்படுத்தி, மக்கள் நலனைக் காக்கும் வகையில் உடனடியாகப் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக எம்எல்ஏ சாய் சரவணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், “ஆன்மீகமும் பண்பாடும் நிறைந்த பூமியாகவும், எண்ணற்ற சித்தர்கள் மற்றும் ஞானிகள் வாழ்ந்து முக்தியடைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புண்ணிய இடமாகவும் புதுச்சேரி விளங்குகிறது. ஆனால், அண்மைக்காலமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலும் மதுபானக் கடைகளும், ரெஸ்டோ பார்களும் அபரிமிதமாகத் திறக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், கலாச்சாரச் சீரழிவை ஏற்படுத்தி, இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாழாக்கும் வகையில் பெருகிவரும் இந்த மது கலாச்சாரத்தைத் தடுக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். எனவே, தற்போது இயங்கி வரும் மதுக்கடைகள் மற்றும் ரெஸ்டோ பார்களின் எண்ணிக்கையை உடனடியாகக் கட்டுப்படுத்தி குறைப்பதுடன், புதுச்சேரி மாநிலத்தில் பூரண மதுவிலக்கை விரைந்து அமல்படுத்த அரசு முன்வர வேண்டும் என ஆளும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன