புதுச்சேரி

புதுச்சேரியில் தூய்மை பாரத தினம்: சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு ஆளுநர், முதல்வர் பாராட்டு!

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி நிர்வாகம் சார்பில் ‘தூய்மை பாரத தினம்’ விழா கம்பன் கலையரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகரின் சுகாதாரத்தைப் பேணிக்காப்பதில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கம்பன் கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு. கே. கைலாசநாதன், முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் திரு. அன்பழகன், உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும், மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

நகரப் பகுதிகளைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது. அந்த வகையில், தங்களின் பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு முன்மாதிரியாகத் திகழ்ந்த தூய்மைப் பணியாளர்களை நேரில் பாராட்டிய தலைவர்கள், அவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கப் பரிசுகளை வழங்கினர்.

தூய்மை பாரத இயக்கத்தின் நோக்கத்தை அடித்தட்டு வரை கொண்டு சேர்த்து, புதுச்சேரியை முழுமையான தூய்மை மிகுந்த மாநிலமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த விழா இனிதே நிறைவடைந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன