புதுச்சேரி

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதலமைச்சரிடம் அன்பழகன் கோரிக்கை

புதுச்சேரி தற்காலிக சபாநாயகர் அன்பழகன், முதலமைச்சர் ரங்கசாமிக்கு அளித்த மனுவில் கடந்த நான்கு மாதங்களில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ₹1,100-க்கு விற்கப்பட்ட அரிசி மூட்டை இப்போது ₹1,800-க்கு விற்கப்படுவதாகவும், துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை மூன்று மடங்காகவும், காய்கறிகளின் விலை இரண்டு மடங்காகவும் உயர்ந்துள்ளதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார். இதனால் ஏழை, எளிய மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியிருப்பதாக கூறிய அவர், மொத்த வியாபாரிகளை அழைத்து பேசி விலையேற்றத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன