புதுச்சேரி

உயிர்காக்கும் மருந்து தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை

மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா, புதுச்சேரி ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு அளித்த மனுவில், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மகப்பேறு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளும் தட்டுப்பாடாக இருப்பதாகவும், இதன் காரணமாக மாநிலத்தில் இறப்பு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அக்டோபர் மாதத்தில் 50 வயதுக்கு மேற்பட்டோரின் இறப்பு சதவீதம் 200-க்கும் மேல் உயர்ந்துள்ளதாகவும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் இறப்பு எண்ணிக்கை 35-ஐ தாண்டியுள்ளதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மாகி, ஏனாம் பிராந்தியங்களிலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், நிதித்துறை, சுகாதாரத் துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் போர்க்கால அடிப்படையில் மருந்து தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன