புதுச்சேரி

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு புதுவையில் புதிய வியூகம் வகுக்கும் காங்கிரஸ்

ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த புதுச்சேரியில், என்.ஆர். காங்கிரஸ் நிறுவனர் ரங்கசாமி கட்சியிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து காங்கிரஸின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது. 2021, 2026 சட்டப்பேரவை தேர்தல்களில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணியிடம் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது. அதன்படி, தற்போதுள்ள ஆறு மாவட்டங்களை 12 மாவட்டங்களாக பிரிக்க புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி எடுத்த முடிவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி ஒரு மாவட்ட தலைவருக்கு இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் மட்டுமே இருக்கும் என்பதால், கட்சி மக்களை நேரடியாக அணுகவும், உள்ளூர் பிரச்சனைகளை விரைவாக மேலிடத்துக்கு கொண்டு செல்லவும் முடியும் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தொடர் தோல்விகளால் சோர்வடைந்துள்ள கட்சி தொண்டர்களை மீண்டும் தூண்டிவிட உள்ளாட்சி தேர்தலில் வெற்றி அவசியமாகியுள்ள நிலையில், நீதிமன்றம் தலையிட்டால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வாய்ப்பும் உள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன