புதுச்சேரி

புதுவையில் மூத்த காவல் அதிகாரிகள் இடமாற்றம்; ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவு

புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி காவல் துறையில் அதிரடி இடமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. பயிற்சி மற்றும் நலத்துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளராக இருந்த ராஜேந்திர குமார் குப்தா, தலைமையகத்தின் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வுடன் மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதுச்சேரி கடலோர பாதுகாப்புப் படையில் பணிபுரிந்த தீபிகா, முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் சிக்கந்தர் சிங் பயிற்சி மற்றும் நலத்துறை காவல் கண்காணிப்பாளராகவும், அனுராக் சோப்ரா சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளராகவும் புதிதாக பொறுப்பேற்றுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன