புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் மன்றம்: 37 புகார்களுக்கு உடனடியாக தீர்வு
புதுச்சேரி மாநிலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காவல் நிலையங்களில் மக்கள் மன்றம் நடத்தப்பட்டு வருகிறது. முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம், திருக்கனூர், முதலியார்பேட்டை, சைபர் கிரைம் மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்களில் உயர் அதிகாரிகள் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் 32 பெண்கள் உட்பட மொத்தம் 168 பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர். முகாமில் பெறப்பட்ட 70 மனுக்களில் 37 புகார்களுக்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு கண்டனர். மீதமுள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
In brief (English)
Puducherry Police conducted their weekly ‘Makkal Mandram’ grievance camps across various stations including Muthialpet, Reddiarpalayam, and Thirukkanur. Out of 70 complaints received from 168 participants, 37 were resolved on the spot by senior police officials.