புதுச்சேரி

புதுச்சேரியில் தலைக்கவசம் அணியாத 7 காவலர்களுக்கு அபராதம்: கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு

புதுச்சேரி அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று எஸ்.பி. மோகன்குமார் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 22 அன்று போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட சோதனையில் கிழக்கு பிரிவில் 3 காவலர்களுக்கும், வடக்கு பிரிவில் 4 காவலர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் புதுவை நகருக்குள் காலை 7 முதல் 10 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையும் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் வந்த லாரிகளை தடுத்து நிறுத்திய போலீசார் காலை 10 மணிக்கு பிறகே அனுமதித்தனர்.

In brief (English)

Puducherry traffic police imposed fines on seven police personnel who were found riding two-wheelers without helmets. Meanwhile, police also enforced restrictions stopping heavy vehicles from entering city limits during peak morning and evening hours.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன