தமிழ்நாடு

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு நகைக்கடையில் போலி தங்க காசு மோசடி முயற்சி: ஊழியரிடம் அறை வாங்கிய மர்ம நபர்

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுக்கா திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் போலி தங்க காசை மாற்ற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைக்கு வந்த ஆண் மற்றும் பெண் இருவர் 2 கிராம் தங்க காசு வேண்டும் என்று கேட்டனர். பெண் ஊழியர் ரேணுகா தங்க காசை கொடுத்தபோது, அந்த ஆண் மின்னல் வேகத்தில் போலி காசை மாற்றியுள்ளார். இதை கவனித்த பெண் ஊழியர், ஒரிஜினல் காசை கேட்டு அந்த நபரை பளார் என அறைந்து சாமர்த்தியமாக மீட்டார். உடனே இருவரும் வாக்குவாதம் செய்தபடியே தப்பி ஓடிவிட்டனர். சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் ஆரோவில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

In brief (English)

A duo attempted to swap a real two-gram gold coin with a fake one at a jewellery shop in Thiruchitrambalam Kootroad, but an alert female staff member caught them and retrieved the coin after slapping the man. Auroville police are searching for the suspects based on CCTV footage.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன