தமிழ்நாடு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் N.ஆனந்த் ஆய்வு

சென்னை, ஆக. 24: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N.ஆனந்த் MLA அவர்கள் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, மழைக்காலத் தயார்நிலைகளை விரிவாக ஆய்வு செய்தார்.

இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களின் தற்போதைய நிலை, மழைநீர் தேங்காமல் தடையின்றி வெளியேறுவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளின் வேகம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் நீர்வளத்துறை அரசு செயலாளர் பிரசாந்த் மு.வடநெரே, சிறப்பு செயலாளர் ஸ்ரீதரன், முதன்மை தலைமைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் திருமதி. ஜானகி, கண்காணிப்புப் பொறியாளர் மாரியப்பன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பருவமழைக் காலங்களில் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நீர் மேலாண்மைப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன