புதுச்சேரி

மிலாது நபி: புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் மாஹேவில் மதுக்கடைகள் அடைப்பு

புதுச்சேரி, ஆக. 24: மிலாது நபி திருநாளை முன்னிட்டு, புதுச்சேரி மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அனைத்து மதுக்கடைகள், சாராயக் கடைகள் மற்றும் பார்களுக்கு ஆகஸ்ட் 26-ம் தேதி ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மதுபான விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி கலால் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாஹே பிராந்தியத்தில் மட்டும் ஆகஸ்ட் 25-ம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பிற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மிலாது நபி தினத்தை அமைதியாகவும், கண்ணியமாகவும் கொண்டாடும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையை மீறி யாரேனும் மதுபான விற்பனையில் ஈடுபட்டால், அவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் 1970-ன் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என கலால் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விற்பனை நிலையங்கள் உரிய நேரத்தில் மூடப்படுவதை உறுதி செய்ய சிறப்பு பறக்கும் படைகளும் கண்காணிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன