புதுச்சேரி கடற்கரை சாலையில் தவறவிட்ட சுற்றுலா பயணியின் கைப்பை: மீட்டு ஒப்படைத்த ஊர்க்காவல்படை வீரர்
புதுச்சேரி கடலோர காவல் படையில் பணியாற்றும் ஊர்க்காவல்படை வீரர் வரதராஜன் கடற்கரை சாலையில் பணியில் இருந்தபோது கேட்பாரற்றுக் கிடந்த கைப்பையைக் கண்டெடுத்தார். அந்த பையை சோதனையிட்டதில் விலை உயர்ந்த செல்போன், பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் அடையாள ஆவணங்கள் இருந்தன. உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து ஆவணங்களை ஆய்வு செய்ததில், அந்த பை கேரளாவைச் சேர்ந்த ராஷ்மி என்ற சுற்றுலா பயணிக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பணம் மற்றும் செல்போன் அடங்கிய கைப்பையை காவல்துறையினர் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
In brief (English)
A coastal home guard personnel in Puducherry found an unattended bag on Beach Road containing Rs 10,000 cash and an expensive mobile phone. After checking the identity cards inside, police traced the owner, a tourist from Kerala, and safely handed over her belongings.