புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான அறிமுகப் பயிற்சி முகாம்

புதுச்சேரி, ஆக. 19: புதுச்சேரி 16-வது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான பல்வேறு சட்டமன்ற நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த அறிமுகப் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. புதுச்சேரியில் உள்ள சிவகதி ஜகானிக் ஹோட்டலின் மூன்றாவது தளத்தில் அமைந்துள்ள ‘அண்ணாமலை மன்றம்’ அரங்கில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அறிமுகப் பயிற்சியில் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சட்டமன்றச் செயல்பாடுகள், விதிகள் மற்றும் நடைமுறைகள் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் சட்டமன்ற விவாதங்களை முறையாக நடத்துவது குறித்து இந்த முகாமில் ஆலோசிக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன