தேசியம்

ராகுல் காந்தி தலைமையிலான எம்.பி.க்கள் சந்திப்பு விவகாரம்: இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய விளக்கம்!

புதுச்சேரி, 06/10/2026: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தை சந்திக்க முற்பட்ட விவகாரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாக வந்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் ஆணையத்தை சந்திக்க விரும்புவதாக ஊடகங்கள் வாயிலாக அறியப்பட்டது. எனினும், மாலை 4.00 மணி வரை எந்தவொரு அரசியல் கட்சியும் முறையான பிரதிநிதிகள் மூலம் சந்திப்புக்கு அனுமதி கோரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாலை 4.00 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான எம்.பி.க்கள் குழு மனு அளிக்க விரும்புவதாக டெல்லி காவல்துறை மூலம் தகவல் கிடைத்தது. கடந்த 2025-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட நெறிமுறைகளின்படி, அரசியல் கட்சிகள் அதிகாரப்பூர்வ பிரதிநிதி மூலம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.

மேலும், சுமார் 240 எம்.பி.க்களுடன் நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் இச்சந்திப்பை நடத்த டெல்லி காவல்துறை மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது. தேர்தல் ஆணைய நெறிமுறைகளின்படி சந்திப்புகள் ஆணைய வளாகத்திலேயே நடைபெற வேண்டும் என்பதால், இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மனுவை நேரில் பெற மூத்த அதிகாரியை அனுப்ப தேர்தல் ஆணையம் முன்வந்த போதிலும், அதனை எம்.பி.க்கள் ஏற்க மறுத்துவிட்டதாக ஆணையத்தின் துணை இயக்குநர் பி. பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன