புதுச்சேரி
புதுச்சேரி: லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் சுதந்திர தின விளையாட்டுப் போட்டிகள்
புதுச்சேரி, ஆக. 16: புதுச்சேரியில் 80-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) மகளிரணி சார்பில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் உற்சாகமாக நடத்தப்பட்டன. சுதந்திர தினத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு கட்சி நிர்வாகிகள் பரிசுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் லட்சிய ஜனநாயக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
