புதுச்சேரி

ஜி.கே. மூப்பனார் பிறந்தநாள்: புதுச்சேரியில் திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை!

புதுச்சேரி, ஆக. 19:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மறைந்த ஜி.கே. மூப்பனாரின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியில் அவரது உருவச்சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பு அருகேயுள்ள ஜி.கே. மூப்பனாரின் திருவுருவச் சிலைக்கு இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு புதுச்சேரி மக்களவை உறுப்பினரும், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வி. வைத்திலிங்கம் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் முன்னாள் அமைச்சர் மு. கந்தசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அரசு கொறடா ஆர்.கே.ஆர். ஆனந்தராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு ஜி.கே. மூப்பனாரின் உருவப்படத்திற்கும் சிலைக்கும் மலரஞ்சலி செலுத்தினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன