புதுச்சேரி

புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரிடம் ரூ.1.50 கோடி மோசடி: ஒருவர் கைது

புதுச்சேரி, புதுச்சேரியில் வீடு கட்டித் தருவதாகக் கூறி பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரிடம் ரூ.1.50 கோடி மோசடி செய்த நபரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி கிருஷ்ணா நகரைச் சேர்ந்த ராஜன் (52), பிரான்சில் வசித்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு புதுச்சேரி வந்த அவரிடம், அவரது உறவினர்களான மாலா, பவானி மற்றும் பவானியின் கணவர் அமிர்தராஜ் ஆகியோர் அரியாங்குப்பத்தில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி அறிமுகமாகியுள்ளனர்.

இதனை நம்பி ராஜன், 1,430 சதுர அடி காலி மனை வாங்க ரூ.35 லட்சம் வழங்கியுள்ளார். தான் பிரான்ஸ் சென்ற பிறகு, அந்த இடத்தை பவானி பெயரில் தற்காலிகமாகப் பத்திரப்பதிவு செய்ய ராஜன் சம்மதித்துள்ளார். பின்னர், வீடு கட்டுவதற்காக மாலா குடும்பத்தாரிடம் ராஜன் வங்கி மூலமாக ரூ.1.50 கோடி அனுப்பியுள்ளார். கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், 2023-ம் ஆண்டு புதுச்சேரி வந்த ராஜன், வீட்டைத் தன் பெயருக்கு மாற்றக் கோரியுள்ளார்.

ஆனால், மாலா குடும்பத்தினர் வீட்டைத் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜன் அளித்த புகாரின்பேரில், புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, அமிர்தராஜை (49) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன