தமிழ்நாடு
நெய்தல் கலை விழா முதல் நாள் நிறைவு

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் 2026 நெய்தல் கலை விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகள் கலை மற்றும் பண்பாட்டு உற்சாகத்துடன் சிறப்பாக நிறைவடைந்தன.
ஐந்தாவது ஆண்டாக நடைபெறும் இந்த நெய்தல் கலை விழாவில், தமிழர் மண்ணின் பாரம்பரியம், கலை, பண்பாடு மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.
விழாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் நிகழ்ச்சிகள் நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ளன. கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டு ஆர்வலர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று விழாவை மேலும் சிறப்பிக்க வேண்டும் என விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.





