புதுச்சேரி
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்தார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

சென்னை, ஆக. 17: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் தமிழக வருகையை முன்னிட்டு, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் சென்னை மக்கள் மாளிகையில் சிறப்பு விருந்து அளித்தார். இந்த நிகழ்வில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கலந்துகொண்டார்.
இந்தச் சந்திப்பின்போது, புதுச்சேரியின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த தனது பார்வைகளைப் பிரதிபலிக்கும் ‘ரைசிங் புதுச்சேரி’ (Rising Puducherry) புத்தகத்தை, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வழங்கினார். புதுச்சேரியின் முன்னேற்றம் தொடர்பான பல்வேறு கருத்துகளை அவர்கள் பரிமாறிக்கொண்டனர்.

