புதுச்சேரி

புதுச்சேரி-கடலூர் சாலையில் அதிரடி வாகன தணிக்கை: 50 கிமீ வேகத்திற்கு மேல் சென்றால் அபராதம்

புதுச்சேரி, ஆக. 18: புதுச்சேரி-கடலூர் சாலையில் (NH-332A) போக்குவரத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில், நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையில் வாகனங்கள் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட வேக வரம்பை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சாலைப் பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. வாகன ஓட்டிகள் வேகக் கட்டுப்பாட்டை கடைபிடித்து விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன