புதுச்சேரி

வில்லியனூரில் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்: முதல்வர் என். ரங்கசாமி திறந்து வைத்தார்!

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் சட்டமன்ற தொகுதியின் புதிய அலுவலகத்தை முதலமைச்சர் ந. ரங்கசாமி முறைப்படி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப. ரவிக்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

வில்லியனூர் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராகக் களம் இறங்கி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றவர் ப. ரவிக்குமார் MLA. தொகுதி மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கவும், நலத்திட்டப் பணிகளைத் தடையின்றி மேற்கொள்ளவும் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்ற அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி நாடாவை வெட்டி அலுவலகத்தைத் திறந்து வைத்ததோடு, சட்டமன்ற உறுப்பினர் ப. ரவிக்குமாரை அவரது இருக்கையில் அமர வைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தொகுதி வளர்ச்சிக்கான புதிய மக்கள் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது பொதுமக்களும் என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களும் சட்டமன்ற உறுப்பினருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன