புதுச்சேரி

ஆகஸ்ட் 24-ல் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்: முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

புதுச்சேரி, ஆக. 20: புதுச்சேரி சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் ந. ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாண்புமிகு புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், அமைச்சரவை சகாக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாகவும், சிறப்பாகவும் நடத்துவது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள முக்கிய மசோதாக்கள் குறித்தும் முதலமைச்சர் தலைமையில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன