புதுச்சேரி

நெல்லித் தோப்பு தொகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும்: கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

புதுச்சேரி, அக். 10: புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், நெல்லித்தோப்பு தொகுதி முழுவதும் தீவிரமாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ. கார்த்திகேயன் சுகாதாரத் துறையிடம் வலியுறுத்தியுள்ளார்.

புதுவையில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், தனது தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியில் இருந்த மருத்துவ அதிகாரிகளை சந்தித்து, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த இதுவரை எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

தொடர்ந்து, குயவர்பாளையத்தில் உள்ள துணை இயக்குநர் (மலேரியா) அலுவலகத்திற்குச் சென்ற அவர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, டெங்கு கொசு உற்பத்தியைத் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தாமதமின்றி தீவிரமாக கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளை நேரில் வலியுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன