புதுச்சேரி

நிர்மல் குமார் சுரானாவுக்கு பாஜக தலைவர் வாழ்த்து

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவுக்கு, பாஜக மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மதிப்பிற்குரிய நிர்மல் குமார் சுரானாவுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுள், நிறைவான உடல்நலம் மற்றும் மன அமைதியை வழங்கி எப்போதும் அருள்புரிய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

நிர்மல் குமார் சுரானா பொதுப்பணிகள் மற்றும் கட்சிப் பணிகளில் மேலும் சிறப்புடன் செயல்பட வாழ்த்துவதாகவும் வி.பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன