தமிழ்நாடு
தமிழக பாஜக அயலக தமிழர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது
சென்னை, ஆகஸ்ட் 12: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அயலக தமிழர் பிரிவு மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 12) சென்னை டி.நகரில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். அயலக தமிழர் பிரிவின் பணிகள், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான உத்திகளைப் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.


