புதுச்சேரி

புதுச்சேரி வருகை தந்த பாஜக மாநில பொறுப்பாளர் கே.சுரேந்திரனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகள் மற்றும் கட்சிப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, பாஜகவின் தேசிய செயலாளரும், புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளருமான கே.சுரேந்திரன் இன்று புதுச்சேரிக்கு வருகை தந்தார்.

புதுச்சேரி விமான நிலையத்திற்கு வருகை தந்த அவருக்கு, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சபாநாயகர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் பாஜக மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் செயல்பாடுகள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கட்சியின் அடிமட்ட அளவிலான கட்டமைப்பு வளர்ச்சி குறித்து விவாதிக்க இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. விமான நிலைய வரவேற்பைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுச்சேரி பயணத்தின் போது, கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் அவர் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், மத்திய பாஜக அரசின் நலத்திட்டங்களை புதுச்சேரி மக்களிடம் முழுமையாகக் கொண்டு சேர்ப்பது மற்றும் எதிர்கால அரசியல் களப்பணிகள் குறித்தும் விரிவான வழிகாட்டுதல்களை வழங்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன