புதுச்சேரி
துணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு கோரி புதுவையில் தமிழ் உரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி அரசு கல்லூரிகளில் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் துணைப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரி தமிழ் உரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யுஜிசி விதிமுறைகளுக்கு முரணான அரசாணையை திரும்பப் பெற வேண்டும், புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அரசுப் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக்கப்பட வேண்டும், புதுவைக்கு தனி கல்வி வாரியம் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
In brief (English)
Members of the Tamil Urimai Iyakkam staged a demonstration near Anna Salai urging the Puducherry government to immediately grant promotions to college assistant professors.