புதுச்சேரி
வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்
புதுச்சேரி வில்லியனூர் அருள்மிகு கோகிலாம்பிகை உடனுறை திருக்காமேஸ்வரர் திருக்கோவில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
In brief (English)
Devotees gathered in large numbers for the Adi Pooram chariot festival at the historic Thirukameeswarar Temple in Villianur, with Home Minister Namassivayam pulling the chariot rope.