புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் எம்பியுமான பேராசிரியர் ராமதாஸ், புதுச்சேரியில் 14 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் தர்மாதிகாரி மற்றும் அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ளதாகவும், வார்டு மறுவரையறை அறிக்கை பெறப்பட்டு தேர்தல் நடத்த 24 மாத கால அவகாசம் வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. எனினும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பது மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உத்தரவிட்டனர்.
In brief (English)
Hearing a public interest litigation, the Madras High Court has directed the government to take expedited steps to conduct local body elections in Puducherry.
