புதுச்சேரி

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளுக்கு முதல் பருவத் தேர்வு விடுமுறை அறிவிப்பு: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

புதுச்சேரி, அக். 01: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் முதல் பருவத் தேர்வு (Term I) விடுமுறை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் முனைவர் வி.ஜி. சிவகாமி அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் இயங்கி வரும் அனைத்து அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதல் பருவத் தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 17-ஆம் தேதி முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு முதல் பருவத் தேர்வு விடுமுறை நாள்களாக இருக்கும்.

விடுமுறை முடிந்து மீண்டும் அக்டோபர் 22-ஆம் தேதி அன்று அனைத்து அரசுப் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த உத்தரவு புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன