காரைக்காலில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி ‘அங்கன்வாடி திருவிழா’ உற்சாகக் கொண்டாட்டம்!

காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட மேல ஓடுதுறை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளையொட்டி ‘அங்கன்வாடி திருவிழா’ வெகு விமரிசையாக நடைபெற்றது.
பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் 76-வது பிறந்தநாள் மற்றும் அவரது 25 ஆண்டுகால மக்கள் சேவையைப் போற்றும் வகையிலும் சிறப்பிக்கும் வகையிலும் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அங்கன்வாடி ஊழியர்கள், அப்பகுதியைச் சேர்ந்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் பிறந்த செப்டம்பர் 17-ஆம் தேதியன்றே பிறந்த ‘கிருத்திக் ஷா’ என்ற பச்சிளம் குழந்தையை நேரில் சந்தித்து அன்போடு வாழ்த்திய நெகிழ்ச்சியான தருணம் அமைந்தது. அக்குழந்தைக்குப் பிரத்யேக வாழ்த்துகளும் ஆசிகளும் தெரிவிக்கப்பட்டன.
இதுகுறித்து அக்குழந்தையின் தாயார் நெகிழ்ச்சியுடன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். “பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் பிறந்த அதே நன்னாளில் எனது குழந்தையும் பிறந்தது எனக்கு அளப்பரிய மகிழ்ச்சியையும், வாழ்நாளில் மறக்க முடியாத சிறப்பான தருணமாகவும் அமைந்துள்ளது” என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பிரதமரின் மக்கள் சேவையைப் போற்றும் வகையில் காரைக்கால் மேல ஓடுதுறையில் நடைபெற்ற இந்த அங்கன்வாடி திருவிழா, குழந்தையை வாழ்த்திய நெகிழ்ச்சியான தருணத்தோடு அப்பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது.


