புதுச்சேரி

கடல் சீற்றம்: வீராம்பட்டினம் கடற்கரையில் பக்தர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டத்தைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அருகிலுள்ள கடற்கரையில் திரண்டனர். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கடலில் இறங்கி குளிக்க முயன்ற பக்தர்களை கடலோர பாதுகாப்புக் குழுமப் படையினர் மற்றும் போலீசார் எச்சரித்துக் கரைக்கு அனுப்பினர். கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் கடலில் இறங்கிக் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கால்களை மட்டுமே நனைக்க அனுமதி உள்ளதாகவும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

In brief (English)

Following the chariot festival, police and coastal security personnel deployed at Veerampattinam beach warned devotees against entering the turbulent sea.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன