புதுச்சேரி
அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடம்: இரண்டாம் கட்ட கலந்தாய்வுப் பட்டியல் வெளியீடு
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் காட்சிக் கலை, இசை மற்றும் நடனம் ஆகிய பட்டப்படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வுப் பட்டியல் மற்றும் இறுதிக்கட்ட வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றும், அதன் பின்னர் இறுதி ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்கள் வரும் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். மேலும் சென்டாக் மூலம் விண்ணப்பிக்காத மாணவர்களும் கல்லூரி முதல்வரை நேரடியாகச் சந்தித்து சேர்க்கை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
In brief (English)
Bharathiar Palkalaikoodam in Ariankuppam has published the second round counselling list for degree programmes in music, dance, and visual arts.

