தமிழ்நாடு
டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் ரசீது வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபாட்டில்களுக்கும் கட்டாயமாக கணினி ரசீது வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அதிக விலைக்கு விற்ற ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
In brief (English)
The Madras High Court directed TASMAC shops to mandatory issue receipts for every bottle sold to prevent overcharging.