புதுச்சேரி

புதுச்சேரியில் மீன்வள உள்கட்டமைப்பு மற்றும் புத்தாக்கத் திட்டங்கள்: முதல்வர் என். ரங்கசாமி தொடங்கி வைத்தார்!

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் மீன்வள உள்கட்டமைப்பு மற்றும் புத்தாக்கத் திட்டங்கள் தொடக்க விழா (Inauguration of Fisheries Infrastructure and Innovative Projects) விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, புதிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் என். ரங்கசாமி, புதுச்சேரி பிராந்தியத்தில் மீன்வள உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக பாரம்பரிய மீனவர்கள், நவீன மீன் வளர்ப்பாளர்கள், மீனவர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் மீன் உற்பத்தியாளர் அமைப்புகள் (FFPO) உள்ளிட்ட மீன்வளத்துறையைச் சார்ந்த அனைத்துத் தரப்பினரின் முன்னேற்றத்திற்கும் அரசு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், மத்திய-மாநில அரசுகளின் இந்த நவீன உள்கட்டமைப்பு மற்றும் புத்தாக்கத் திட்டங்கள் மூலம் புதுச்சேரி மீன்வளத்துறை புதிய உச்சத்தை எட்டும் என்றும், மீனவக் குடும்பங்களின் நிலையான வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இவை வழிவகுக்கும் என்றும் முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன