புதுச்சேரியில் நடைபெறவிருந்த விஜய் ஆண்டனியின் நேரடி இசைக்கச்சேரி ரத்து!
புதுச்சேரி: புதுச்சேரி எக்ஸ்போ மைதானத்தில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவிருந்த பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் நேரடி இசைக்கச்சேரி (Vijay Antony Live Concert) திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி இசை ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி, எக்ஸ்போ மைதானத்தில் மிக விமரிசையாக நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான தொடக்கக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், தவிர்க்க முடியாத நிர்வாகக் காரணங்களால் செப்டம்பர் 5-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த இந்த இசைக்கச்சேரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த ஆவலுடன் காத்திருந்த விஜய் ஆண்டனியின் ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் மத்தியில் இந்த ரத்து அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

