நிரவி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மழைக்கோட் வழங்கிய எம்.எல்.ஏ. டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்!

காரைக்கால்: நிரவி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இலவச மழைக்கோட்டுகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் வழங்கினார்.
காரைக்கால் மாவட்டம் நிரவி – திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட நிரவி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மழைக்கால உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிரவி – திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் நேரில் கலந்துகொண்டு, மாணவ – மாணவிகளுக்கு மழைக்கோட்டுகளை (Raincoats) வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் மழையில் நனையாமல் பாதுகாப்பாகவும், உடல்நலக் குறைவு ஏற்படாமலும் பள்ளிக்கு வந்து செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினரின் இந்த பயனுள்ள முன்னெடுப்புக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவ – மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தங்களது நன்றியினைத் தெரிவித்தனர்.

