திருக்கனூர் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி: அமைச்சர் ஆ. நமச்சிவாயம் துவக்கி வைத்தார்!

புதுச்சேரி: புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட திருக்கனூர் பகுதியில் அமைந்துள்ள போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான கலை மற்றும் அறிவியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி கண்காட்சியை முறைப்படி துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளால் ஆர்வத்துடன் உருவாக்கப்பட்ட பல்வேறு வண்ணமயமான கலைப் படைப்புகள், இயற்பியல், வேதியியல், உயிரியல் மாதிரிகள் மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த புதுமையான அறிவியல் படைப்புகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். அப்போது மாணவர்களிடம் அவர்களின் படைப்புகளின் செயல்பாடு மற்றும் தத்துவம் குறித்து அமைச்சர் கேட்டறிந்து, அவர்களின் திறமையை வெகுவாகப் பாராட்டினார்.
மாணவப் பருவத்திலேயே அறிவியல் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளவும், அவர்களின் தனித்துவமான படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் இதுபோன்ற கண்காட்சிகள் பெரும் பங்கு வகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகத்தினர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.


