புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: ஏஐசிசி மேலிடப் பொறுப்பாளர்கள் பங்கேற்பு!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் உழையன்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ சீனிவாசா ரெசிடென்சியில் எழுச்சியுடன் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) பொதுச்செயலாளரும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் விவகாரங்களின் மேலிடப் பொறுப்பாளருமான குலாம் அகமது மிர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வேட்பாளரை முறைப்படி அறிமுகப்படுத்திப் பேசினார். அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் நிவேதித் ஆல்வா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

இந்நிகழ்வில் மதச்சார்பற்ற சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சித் தலைவர்கள், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டு தேர்தல் களப் பணிகள் குறித்து ஆலோசித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன