புதுச்சேரி

முத்தியால்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஜூன் 18-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

புதுச்சேரி காட்டாமணிக்குப்பம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் 18-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். இதனால் முத்தியால்பேட்டை முழுவதிலும், சோலை நகர், கணேஷ் நகர், அங்காளம்மன் நகர், வ.உ.சி. நகர், வைத்திக்குப்பம், குருசுக்குப்பம், தெப்பசம்பேட்டை மற்றும் விஸ்வநாதன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

In brief (English)

Water supply will be temporarily halted in Muthialpet and nearby areas on Tuesday, June 18, between 12 PM and 2 PM due to tank maintenance.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன