புதுச்சேரி
புதுச்சேரியில் செவாலியே செல்லான் நாயகர் பிறந்தநாள் விழா: அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
புதுச்சேரி, 09/09/2026: புதுச்சேரி அரசு சார்பில் விடுதலைப் போராட்ட வீரரும் சமூகப் பெரியாருமான செவாலியே செல்லான் நாயகரின் பிறந்தநாள் விழா இன்று அரசு முறைப்படி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி குபேர் சாலையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மேரி கட்டட அரங்கில் செவாலியே செல்லான் நாயகர் திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இவ்விழாவில் புதுச்சேரி அமைச்சர்கள் ராஜவேலு, சிவக்கொழுந்து ஆகியோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில் (எ) ரமேஷ், டாக்டர் விக்னேஸ்வரன், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் செல்லான் நாயகரின் குடும்பத்தினர் கலந்துகொண்டு அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி அவரது பொதுவாழ்வுச் சேவைகளை நினைவு கூர்ந்தனர்.