புதுச்சேரி

உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்: இந்திய அணியில் 4 புதுச்சேரி வீரர்கள் தேர்வு – முதல்வர் ரங்கசாமியிடம் வாழ்த்துப் பெற்றனர்!

புதுச்சேரி, செப். 09: சர்வதேச அளவில் நடைபெறவுள்ள மதிப்புமிக்க ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்க புதுச்சேரியைச் சேர்ந்த நான்கு இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பெருமை சேர்த்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடான பராகுவேயில் (Paraguay) நடைபெறவுள்ள ‘வேர்ல்ட் ஸ்கேட் கேம்ஸ் 2026’ (World Skate Games 2026) உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த புதுச்சேரி வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் ஸ்பீட் மற்றும் இன்லைன் ஃப்ரீஸ்டைல் ஆகிய பிரிவுகளில் லோனத், விஷ்ணு பிரசாத், சரதி மற்றும் ஜெய்ஷிதா ஆகிய நான்கு வீரர்கள் இந்தியாவின் சார்பில் போட்டியிட உள்ளனர்.

சர்வதேசப் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள வீரர், வீராங்கனைகள் புதுச்சேரி முதலமைச்சர் ந. ரங்கசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். முதலமைச்சர் வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து, சர்வதேச களத்தில் வெற்றி பெற்று நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று ஆசி வழங்கினார். இந்நிகழ்வின் போது பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டுத்துறை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன