புதுச்சேரி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக தனித்துப் போட்டி?: நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

புதுச்சேரி, செப். 09:
புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்தல் வியூகம் தொடர்பாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இக்கூட்டத்தில் புதுச்சேரி மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், மாநில அமைப்பாளருமான ஆர்.சிவா உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தொகுதியின் கள நிலவரம், கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் தனித்துப் போட்டியிடுவதால் கிடைக்கும் வெற்றி வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான திமுக வேட்பாளராக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சிவா, மருத்துவர் ரித்தீஷ் அல்லது தங்கவேலு ஆகிய மூன்று பேரில் ஒருவர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேட்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் திமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட உள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன