மேகதாத அணை: தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய அரசு விளக்கம்
காவிரியின் குறுக்கே மேகதாதவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்துவரும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜ்பூஷன் சவுதரி, 2018 உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டும் என எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றார். மேலும், காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு உட்பட்டு கர்நாடகா திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை தாக்கல் செய்யுமாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே, மேகதாத திட்டத்திற்கு மத்திய அரசு ஆதரவாக செயல்படுவதாக கர்நாடக அமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Union Minister of State for Water Resources Rajbhushan Choudhary clarified in Parliament that the 2018 Supreme Court verdict does not explicitly mandate Karnataka to obtain consent from Tamil Nadu, Kerala, or Puducherry for the Mekedatu dam construction. Replying to a query by PMK MP Anbumani Ramadoss, the minister stated that Karnataka was asked to submit a revised DPR complying with the Cauvery Water Disputes Tribunal orders. Meanwhile, Karnataka leaders held a consultative meeting in Delhi, expressing satisfaction over the Centre’s response. Tamil Nadu farmers have expressed deep concern over this development.