தேசியம்
நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: 13 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கை சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 13 பேருக்கு எதிராக சிபிஐ டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
In brief (English)
The CBI filed its first chargesheet against 13 people arrested in connection with the NEET paper leak case. The document was submitted before Delhi’s Rouse Avenue Court as investigations continue.