தமிழ்நாடு

151 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள 151 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை இன்றைக்குள் அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த இடங்கள் ஒப்படைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு பிறகும் இடங்கள் காலியாக இருந்து கட்-ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டால், அதில் 50 சதவீத இடங்களை மீண்டும் மாநில தொகுப்புக்கே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற தீர்ப்பை அரசு வரவேற்பதாகக் கூறப்பட்டுள்ளது.

In brief (English)

The Supreme Court has directed the Tamil Nadu government to hand over 151 vacant super-specialty medical seats to the All India Quota. State authorities confirmed compliance while noting provisions for reclaiming seats if cut-off marks are lowered later.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *