கோவில்களுக்குள் செப்டம்பர் 1 முதல் செல்போன்களுக்கு தடை: அறநிலையத்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. இதற்காக 20 நாட்களுக்குள் செல்போன் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கோவில்களில் விஐபி தரிசனங்களால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
In brief (English)
The Hindu Religious and Charitable Endowments department has banned mobile phones inside temples in Tamil Nadu starting September 1.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களிலும், வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களை எடுத்துச் செல்ல முழுமையான தடை அமல்படுத்தப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், அனுமதியின்றிப் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்வதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்கள் செல்போன்களைப் பாதுகாப்பாக ஒப்படைப்பதற்காகக் கோயில்களில் லாக்கர் வசதி ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. செல்போன்களை ஒப்படைத்துவிட்டுத் தரிசனம் முடித்து வெளியே வரும்போது மீண்டும் பெற்றுக்கொள்ளும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.
செல்போன் பாதுகாப்பு வசதிக்காக ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ரசீது அறநிலையத் துறையின் ITMS முறையில் வழங்கப்படும் என்றும், தடை குறித்த அறிவிப்புகள் கோயில் நுழைவு வாயில்கள் மற்றும் முக்கிய இடங்களில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.