தமிழ்நாடு

அதிமுகவின் 55-ஆம் ஆண்டு தொடக்க விழா: எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓமலூரில் ஆலோசனைக் கூட்டம்!

சேலம்: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55-ஆம் ஆண்டு தொடக்க விழாவினை மாநிலம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடுவது மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஓமலூரில் அமைந்துள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இக்கூட்டத்தில், அதிமுக தொடங்கப்பட்டு 54 ஆண்டுகள் நிறைவடைந்து 55-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, கழகத்தின் 55-ஆம் ஆண்டு தொடக்க விழாவினை சேலம் புறநகர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிளைக் கழகங்களிலும் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி மிகச் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன், கட்சியின் உட்கட்டமைப்பு, உறுப்பினர் சேர்க்கை, கழக வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்வரும் அரசியல் களப் பணிகள் குறித்து மாவட்ட கழக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைகளை வழங்கி உரையாற்றினார். இதில் சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன