புதுச்சேரி

புதுச்சேரியில் தீபாவளி உதவித்தொகை ரூ.7,000 வழங்கக் கோரி தையல் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, அக்.13: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தையல் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்தி புதுச்சேரியில் சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுவை பிரதேச தையல் கலைஞர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை அருகே அமைந்துள்ள சமூகப் பாதுகாப்பு வாரிய அலுவலகம் முன்பாக இக்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தையல் கலைஞர்கள் சங்கத் தலைவர் தினேஷ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் சீனிவாசன் மற்றும் மாநிலச் செயலாளர் மணிபாலன் ஆகியோர் முன்னிலை வகித்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் சங்க நிர்வாகிகள் தியாகராஜா, மதிவாணன், கோவிந்தம்மன், விஜயகுமார், ரேவதி, காயத்ரி, பாஜித், கலைவாணி, சாந்தி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான தையல் கலைஞர்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல வாரியம் மூலம் தையல் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி ரூ.7,000 ஆக உடனடியாக வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், தையல் தொழிலாளர்களைத் தாமதமின்றி சமூக பாதுகாப்பு வாரியத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும், விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் உறுப்பினர் பதிவை முழுமையாக முடித்து அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் அரசுக்கு வலுவான கோரிக்கை விடுத்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன