புதுச்சேரி

புதுச்சேரியில் உலக அயோடின் குறைபாடு தினத்தை முன்னிட்டு மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரி, அக்டோபர் 21: உலக அயோடின் குறைபாடு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி சுகாதாரத்துறையின் உதவி இயக்குனர் அலுவலகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.

சபரி செவிலியர் கல்லூரி மற்றும் லாஸ்பேட்டை சமுதாய கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற இப்பேரணிக்கு உதவி இயக்குனர் டாக்டர் எஸ். சுவாமிநாதன் தலைமை தாங்கினார். சுகாதார இயக்குனர் டாக்டர் செவ்வேல் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

கம்பன் கலை அரங்கிலிருந்து தொடங்கிய பேரணி அண்ணாசாலை நேர் வீதி மிஷன் வீதி வழியாக சென்று கடற்கரை காந்தி சிலை அருகை நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற மாணவ மாணவிகள் ஐயோடின் குறைபாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் ஐயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து முழக்கங்களை எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன